ஆந்திர மாநிலத்தில் மாவோஸ்யிடுகள் நடத்திய தாக்குதலில் கிடாரி சர்வேஸ்வர ராவ் எம்.எல்.ஏ சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம், அரக்கு தொகுதியைச் சேர்ந்த தெலுங்குதேச எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ்.
இவர் தனது தொகுதிக்குட்பட்ட தும்ரிகுடா பகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மாவோஸ்யிடுகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
மேலும் இந்த தாக்குதலில் முன்னாள் எம்.எல்.ஏ கிசேரி சோமாவும் படுகாயமடைந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்த ஆந்திர மாநில போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.
பெண் தலைமையிலான மாவோஸ்யிடுகள் குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தமிழக, கேரள, கர்நாடக எல்லையில் கொரில்லா போராட்டத்துக்கு மாவோயிஸ்ட் அழைப்புவிடுத்துள்ளது.
3 மாநிலங்கள் சந்திக்கும் இடத்தை கொரில்லா போர் மண்டலமாக மாற்றி வருவதாகவும் அறிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை அமைக்க உள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.