ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை இணையவழியாக செலுத்தும் வசதி நாளை முதல் அறிமுகமாகிறது.
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி அக்டோபர் ஒன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 1 ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி தொடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது. https://parivahan.gov.in/parivahan/ என்கிற இணையத்தளத்தில் விண்ணப்பித்துக் கட்டணத்தை வங்கி இணைய சேவை, டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டு ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fees for Driving license can pay through online from oct-1