தமிழகத்திற்கு ரெட் அலர்ட் : இந்திய வானிலை எச்சரிக்கை

தமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி ரெட் அலர்ட் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் 7 -ம் தேதி முதல் 25 சென்டி மீட்டர்க்கு மேல் மழை பெய்யும் என்றும் தமிழகத்தில்  வானிலை மிகவும் மோசமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும் என்றும்
பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் வானிலை ஆய்வு கூறியுள்ளது.

தமிழகத்தில் ஆயிரத்து 275 இளைஞர்களுக்கு பேரிடர் மீட்புக்குழு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும்
நிவாரண முகாம்கை தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவை மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும்
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் மழை விபரங்கள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட்லி காலை உணவிற்கு சிறந்தது : யுனெஸ்கோ சான்றிதழ்..

திருமுருகன் காந்தியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ஸ்டாலின்..

Recent Posts