மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேசினார்.
இதையடுத்து, மீண்டும் இந்தியா திரும்பிய அவரை, பெங்களூரு கேம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேசத்துரோக வழக்கில் கைது செய்தனர்.
இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருமுருகன் காந்தி ஏற்கெனவே சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிரான பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், அவரை விடுதலை செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.
அவரது உடல்நிலையும் சிறையில் மோசமானதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 22-க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றார்.
இதையடுத்து, அவர் கடந்த செவ்வாய்கிழமை, காந்தி ஜெயந்தியன்று சிறையிலிருந்து விடுதலையானார். விடுதலையான அவர், தமிழகத்தில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், அவர் வயிற்று போக்கு மற்றும் செரிமான பிரச்சினை, ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று (வியாழக்கிழமை) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பேசினார்.
இதையடுத்து, மீண்டும் இந்தியா திரும்பிய அவரை, பெங்களூரு கேம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேசத்துரோக வழக்கில் கைது செய்தனர்.
இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருமுருகன் காந்தி ஏற்கெனவே சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிரான பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், அவரை விடுதலை செய்யுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.
அவரது உடல்நிலையும் சிறையில் மோசமானதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், 22-க்கும் மேற்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றார்.
இதையடுத்து, அவர் கடந்த செவ்வாய்கிழமை, காந்தி ஜெயந்தியன்று சிறையிலிருந்து விடுதலையானார்.
விடுதலையான அவர், தமிழகத்தில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.