பள்ளிக்குழந்தைகளைின் வாசிப்பு திறனை அதிகரத்தால்தான் எதிர்காலத் தலைமுறை அறிவார்ந்த சமூகமாக மாறும்.
அதற்கான முயற்சியில் இறங்கி பள்ளி மாணவர்களை புத்தக திருவிழா நோக்கி அழைத்து வந்து அவர்களுக்கு வாசிப்புத் திறனை அதிகரிக்கும் முயற்சி தேவகோட்டையில் நடைபெற்றது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தேவகோட்டை பதிப்பாளர் சங்கம் சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழாவை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.
தேவகோட்டையில் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழா பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் புத்தகத் திருவிழாவை காண சென்றனர்.
ஆசிரியை செல்வ மீனாள் ,ஆசிரியர்கள் கருப்பையா, ஸ்ரீதர் ஆகியோர் அழைத்து சென்றனர். மாணவ,மாணவியர் மிகுந்த மகிழ்ச்சியுடன் புத்தக திருவிழா ஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.