ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தால் பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை..

ஈரானிடமிருந்து தொடர்ந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யஉள்ள நிலையில், பொருளாதாரத் தடைகள் விதிப்பதில் இருந்து விலக்களிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இருப்பினும் வரும் நவம்பரில் ஈரானிடம் இருந்து 9 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது.

இந்நிலையில், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவை கணிசமாக குறைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு, பொருளாதார தடை விதிப்பில் இருந்து சலுகைகள் அளிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அல்பான்சோ மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு..

உயர்கல்வித்துறை ஊழல் குறித்து ஆளுநர் விசாரிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

Recent Posts