தாமிரபரணி புஷ்கரம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம், நெல்லை இடையே சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெல்லை-சென்னை தாம்பரம் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது
இந்த சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06040) வருகிற அக்டோபர் 12 மற்றும் 14-ம் தேதி மதியம் 2 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
நெல்லை-சென்னை தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06044), வருகிற 16-ம் தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
நெல்லை-சென்னை தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில்(06042), வருகிற 14-ம் தேதி மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
நெல்லை-சென்னை தாம்பரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06046), வருகிற 17-ம் தேதி மதியம் 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
சென்னை தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்: 06039), வருகிற 11 மற்றும் நவம்பர் 13-ம் தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.
சென்னை தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06043), வருகிற 15-ம் தேதி இரவு 7.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு நெல்லை சென்றடையும்.
சென்னை தாம்பரம்-நெல்லை சுவிதா சிறப்பு ரயில் (82625), வருகிற 16-ம் தேதி மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு நெல்லை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (அக்:7) தொடங்குகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.