அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் – புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் வட அந்தமான் மற்றும் வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக் கூடும். அக் 7முதல் அக்-12 வரை தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும், அக் – 7 முதல் அக்-9 வரை தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்தந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

Weather report

ஹெயிட்டி தீவில் பயங்கர நிலநடுக்கம் : 11 பேர் உயிரிழப்பு..

நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்

Recent Posts