புகார் கொடுத்த உடனே ராஜினாமா செய்யனும்னா யாருமே அமைச்சரா இருக்க முடியாது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

 

ஊழல் புகார் கொடுக்கப்பட்ட உடனேயே ராஜினாமா செய்ய வேண்டும் என்றால் யாருமே அமைச்சராக இருக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை திங்களன்று நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவையும் அளித்துள் ளார்.பிரதமரிடம் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கக் கோருவது, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் உதான் திட்டத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவது மற்றும் திட்டப் பணிகள் குறித்த கோரிக்கை மனுவையும் முதல்வர் அளித்தார்.சந்திப்புக்கு பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள் குறித்தும், நிதி ஒதுக்குவது குறித்தும் கோரிக்கை வைத்துள்ளேன். பேரறிஞர் அண்ணா வுக்கும், ஜெயலலிதாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்கக் கோரியும் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அதனை நிறைவேற்றித் தரக் கோரி வலியுறுத்தியுள்ளேன். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்றும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

சென்னையின் நிரந்தர வெள்ளத் தடுப்பு கட்டமைப்பு பணிகளுக்கு 4445 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும், 2017-18 ஐஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும், மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதி வழங்கக் கூடாது, காவிரி நீர் பாசன மேம்பாடு மற்றும் மறுவாழ்வு திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும், புயலில் காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க குமரியில் ஹெலிகாப்டருடன் கூடிய நிரந்தர கப்பற்படை தளம் அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு வர வேண்டிய 8699 கோடி ரூபாய் பங்குத் தொகையை விடுவிக்க வேண்டுமெனவும், இராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி, ஓசூர், நெய்வேலி, இராம நாதபுரத்திற்கு உதான் திட்டத்தின் கீழ் விமான போக்குவரத்து சேவையை விரைந்து செயல்படுத்தவும், சேலத்தில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப் பிட்டார்.

அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ‘‘யார் வேண்டு மானாலும் வழக்கு தொடரலாம்; அதில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும்; யாராவது புகார் கொடுத்தால் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்றால், யாருமே அமைச்சர்களாக இருக்க முடியாது” என்று பதிலளித்தார்.

EPS Dismissed Allegations on Ministers

நிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)

நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் திடீர் கைது

Recent Posts