ஐநாவுக்கான அமெரிக்காவின் தூதராக பணியாற்றிய இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே ராஜினாமா

ஐநா சபையின் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளிப் பெண் நிக்கி ஹாலே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29-வது தூதராக இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே கடந்த 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அமரிக்காவின் அதிபராக ஒபாமா பதவி வகித்த காலக்கட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் முதல் பெண் கவர்னராக தேர்வு செய்யப்பட்டவர் நிக்கி ஹாலே. அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவுக்கான தூதராக நியமிக்கப்பட்டார். ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையை முழு மூச்சாக ஆதரித்த நிக்கி, ஐநா மனித உரிமைகள் ஆணையம் அமெரிக்கா விவகாரத்தில் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார். 

இந்நிலையில், ஐநாவின் அமெரிக்காவுக்கான தூதர் பதவியில் இருந்து நிக்கி ஹாலே பதவி விலகியுள்ளார். வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்புடன், கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த நிக்கி ஹாலே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா செய்வதாக வெளியான தகவல்களை மறுத்த நிக்கி ஹாலே, அதிபர் ட்ரம்பிற்கு உதவியாக தனது பணிகள் தொடரும் எனக் கூறினார். நிக்கி ஹாலேவின் பணி பாராட்டுக்குரியது எனத் தெரிவித்த ட்ரம்ப், தமக்கு உதவியாக பணிகளைத் தொடர்வதாக கூறியதற்காக நிக்கி ஹாலேவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Nikki Haley resigns as US ambassador to the UN

 

 

உ.பி. ரேபரேலி அருகே ரயில் தடம்புரண்டது: மூன்று பேர் பலி

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு “எம்ஜிஆர்” பெயர் சூட்டப்பட்டது..

Recent Posts