திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விமான நிலைய சுற்றுச்சுவர் மற்றும் டவரில் உரசிச் சென்று விபத்து ஏற்பட்டது. 136 பயணிகளும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய்க்கு 136 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது.
புறப்பட்ட உடனேயே, விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்தது. இதனால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவர் மற்றும் அருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்திலும் விமானம் உரசி சென்றது.
பின்னர் அங்கு விமானம் சோதனை செய்யப்பட்டது. சுவரில் உரசியதால் விமானத்தின் பின் பகுதியில் சிராய்ப்பு மற்றும் சேதம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் துபாய் செல்ல வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விமானி மற்றும் துணை விமானியிடம் தகவல்கள் பெறப்பட்டு அதன அடிப்படையில் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
விபத்து நடந்த இடத்தை தமிழக அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் இன்று காலை சென்று பார்வையிட்டார்.
விமானியின் சாதுர்யத்தால் விமானத்தில் பயணித்த 136 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அந்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது