சீனாவில் ஆளில்லா போக்குவரத்து விமானம்: சோதனை வெற்றி..

உலகின் மிகப் பெரிய ஆளில்லா போக்குவரத்து விமானத்தை தயாரித்து சீனா சோதனை செய்துள்ளது.

ஃபெய்ஹாங் 98 ((Feihong-98 )) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விமானம் ஏறத்தாழ ஐந்தே கால் டன் எடை கொண்ட பொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.

சீன விண்வெளி தொழில்நுட்பக் கழகம் தயாரித்துள்ள இந்த விமானம் வடக்குப் பகுதியில் உள்ள போட்டோ ((Baotou)) என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.

4 ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட ஃபெய்ஹாங் 98, ஆயிரத்து 200 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கண்காணிக்கும் திறமையும் கொண்டது.

இந்த விமானத்தின் மூலம் பெருமளவு ஆயுதங்களை வீரர்களுக்கும், குறிப்பிட்ட இடங்களுக்கும் கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில்“ஆசிரியர் தகுதித் தேர்வு”(TET) : கல்வியமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சபரிமலை விவகாரம்: கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் ..

Recent Posts