ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு..

ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கினர்.அவர்களை திருப்பி அனுப்ப கேரள சுற்றுலா அமைச்சர் உத்தரவிட்டதையடுத்து திருப்பி அனுப்பவுள்ளனர்.

பெண் பக்தர்கள் விரதம் இருந்து வரவேண்டும் பெண்ணியவாதிகளை அனுமதிக்க முடியாது என கூறிய அமைச்சர் தற்போது இரண்டு பெண்களும் பக்தைகள் இல்லாததால் திரப்பி அனுப்பப் படுவதாக தெரிவித்தார்.

ஆந்திராவை சேர்ந்த செய்தியாளர் கவிதா உள்பட 2 பெண்கள் சபரிமலை சன்னிதானம் நோக்கி செல்கின்றனர்.

போராட்டக்காரர்களின் எதிர்ப்பையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்கு 2 பெண்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் மற்றும் கருப்பு ஆடையுடன் இருமுடி சுமந்து கொண்டு மற்றொரு பெண் சபரிமலை செல்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புக்கு பின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலக்கல், பம்பையில் போராட்டம் வெடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கோயிலுக்கு செல்வதற்காக பெண்கள் வந்து கொண்டுள்ளனர்.

போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பால் பெண்கள் திரும்பி செல்லும் நிலை தான் உள்ளது.

அவர்களை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறை வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த செய்தியாளர் கவிதா மற்றும் கருப்பு ஆடையுடன் இருமுடி சுமந்து கொண்டு மற்றொரு பெண்ணும் சபரிமலை சன்னிதானம் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு போலீஸ் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் மாயமான விவகாரம் : சவுதி தூதரகத்தில் 2-வது முறையாக துருக்கி அதிகாரிகள் சோதனை..

சபரிமலையில் அமைதி திரும்பியவுடன் மீண்டும் வருவேன்: பெண் செய்தியாளர் கவிதா பேட்டி

Recent Posts