உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது : உயர் நீதிமன்றம் வேதனை..

உலகம் உள்ள வரைக்கும் வடகலை, தென்கலை இடையேயான கருத்து வேறுபாடு தீராது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலில் தமிழில் பிரபந்தம் பாட தடை கோரிய அவசர வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நிதிபதி வைத்தியநாதன்,

உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை இடையேயான கருத்து வேறுபாடு தீராது என வேதனையாக கருத்து தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் வேதாந்த தேசிகரின் பிரபந்தத்தை தமிழில் பாட அனுமதி கோரிய வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் இடைக்காலமாக அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார்.

அதன் விசாரணை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழில் பிரபந்தம் பாட தடைகோரி ஸ்ரீநிவாசன் என்பவர் அவசர வழக்கு தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஏற்கனவே நீதிபதி மகாதேவன் முன் நிலுவையில் உள்ள வழக்கில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழில் பிரபந்தம் பாடக் கூடாது என உத்தரவிட்டார்.

அனைவரின் வழிபாட்டுக்கும் உரிய இடமான கோயிலில், வடகலை – தென்கலை பிரிவினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதி கூறினார்.

உலகம் உள்ள வரை இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டுக்கு தீர்வு வராது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இவர்கள் தங்களை மனிதகுலம் என்று கூறுவதற்கு பதிலாக, மனித குலம் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இலங்கை பிரதமர் ரணில் சந்திப்பு…

திமுகவில் தொகுதிவாரியாக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்: முழுமையான பட்டியல்

Recent Posts