இந்தியாவிலேயே பெண் நீதிபதிகள் அதிகம் இருப்பது தமிழகத்தில்தான் : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பெருமிதம்..

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் பெண் நீதிபதிகள் பணிபுரிந்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி பெருமிதம் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மகளிர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிபதி சொக்கலிங்கம் நூலகம் மற்றும் குளுரூட்டப்பட்ட அரங்கம் திறப்பு விழாவில் நீதிபதி தஹில் ரமாணி கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அவர், பெண் வழக்கறிஞர்கள் முற்காலத்தில் பணிபுரிவதில் மிகுந்த சிரமம் இருந்ததாகவும் தற்போது அந்த சிரமங்கள் நீங்கி, ஆண் வழக்கறிஞர்களுக்கு சமமாக பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

விழாவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார், ஜி.ஆர். சுவாமிநாதன் உட்பட நீதிபதிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆடியோ விவகாரம்; ‘தினகரனைச் சார்ந்தவர்கள் சதி’; சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்- அமைச்சர் ஜெயக்குமார்…

நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் உலக வங்கிக் கடன் விதிகளை முதல்வர் மீறியது எப்படி?: ஆ.ராசா கேள்வி ..

Recent Posts