வரும் 26, 27ல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப் புள்ளது.

வரும் 26, 27ல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது: தென்னிந்திய பகுதிகளில், வரும் 26-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கு வதற்கான சாதகமான சூழல் நிலவு கிறது.

தற்போது இலங்கை அருகே காற்று சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. அதன் காரண மாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான அல்லது இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு களின்படி அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஆகிய இடங் களில் தலா 9 செமீ, நாகப்பட்டி னம் மாவட்டம் அணைக்காரன்சத் திரத்தில் 8 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், திரு நெல்வேலி மாவட்டம் பாபநாசம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆகிய இடங்களில் தலா 7 செமீ,

தூத்துக்குடி மாவட்டம் திருச் செந்தூர், திருநெல்வேலி மாவட்டம் தென்காசி ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
.

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு : கூவத்தூர் ஆன குற்றாலம்..

‘பன்றிக் காய்ச்சல்’: போலி மருத்துவர்களால் தமிழகத்தில் மரணங்கள் அதிகரிப்பு …

Recent Posts