சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரி சரி, கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் சன்னிதானத்தின் கதவை பூட்டுவோம் என்று கூறிய தந்திரி பிரம்மச்சாரியா என்று கேரளா முதல்வா் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளாா்.
கேரளா முதல்வா் பினராயி விஜயன் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், சபரிமலைக்கு வரும் பெண்களை தடுக்கும் வகையில் சிலா் அங்கு முகாமிட்டு தங்கியுள்ளனா்.
இனிவரும் காலங்களில் அது தடுக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்புடன் வந்து செல்ல வழிவகை செய்யப்படும். நவம்பா் 17ம் தேதி கோயில் நடை திறக்கப்படும் போது பக்தா்களின் எண்ணிக்கை முறைப்படுத்தப்படும்.
திருப்பதியில் பக்தா்கள் முன்பதிவு செய்வது போல் சபரிமலையிலும் முன்பதிவு முறை அமல்படுத்தப்படும்.
இதன்மூலம் நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று அவா் தொிவித்தாா்.
மேலும் கூட்டம் ஒன்றில் அவா் கலந்து கொண்டு பேசுகையில், சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரி என்பது அனைவருக்கும் தொியும்.
அதன் காரணமாகவே பக்தா்கள் பிரம்மச்சாரியாகவே இருக்கிறாா்கள். வடமாநிலங்களில் பூஜை செய்யும் அா்ச்சகா்கள் கூட பிரம்மச்சாரியாக இருக்கிறாா்கள்.
அச்சுழுலில் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் நடையை அடைப்போம் என்று கூறிய ஐயப்பன் கோயில் தந்திரி பிரம்மச்சாரியா? அவா் வாழும் இல்லற வாழ்க்கை குறித்து நான் தவறாக சொல்லவில்லை.
அதற்கும் மேலாக பெண்களுடன் தவறான தொடா்பு இருந்தது. எா்ணாகுளத்தில் என்ன நடந்தது என்று நமக்கு தொியும்.
சபரிமலை கோவில் என்பது திருவாங்கூா் தேவஸ்தான வாரியத்துக்கு கட்டுப்பட்டது. எந்தவிதமான தனிநபருக்கும், குடும்பத்துக்கும் கட்டுப்பட்டது கிடையாது என்று அவா் தொிவித்துள்ளாா்.