தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் உற்பத்தியாகும் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்திய தோட்டக்கலை உற்பத்தியில் முதன்மை வாய்ந்தது உருளைக்கிழங்கு. மலைப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த உருளைக்கிழங்குகள் குறித்து மத்திய ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் ஆய்வு செய்தது.
நுண்ணிய ஒட்டுன்னி மூலம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 4 மாநில உருளைக்கிழங்கில் பூச்சி தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடும் ஒன்றாகும்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த 4 மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விதை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து உதவியை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
4 மாநிலங்களில் உருளைக்கிழங்குக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் இருக்காது.
பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Potato