சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. தயாள் சிங் கல்லூரியில் இருந்து சிபிஐ தலைமை அலுவலகத்தை நோக்கி சென்ற இப்பேரணியில், காங்கிரஸ் மூத்த தலவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Delhi: Congress President Rahul Gandhi leads protest march from Dyal Singh College to CBI HQ against the removal of CBI Chief Alok Verma. pic.twitter.com/3SnUO8XpaT
— ANI (@ANI) October 26, 2018
மேலும் திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, சரத்யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் ராகுல் தலைமையிலான இப்பேரணியில் பங்கேற்றனர்.
Delhi: Congress's Anand Sharma, CPI's D Raja and Sharad Yadav outside Dyal Singh College, ahead of the protest march to CBI HQ against the removal of CBI Director Alok Verma. pic.twitter.com/JhkhO3WER9
— ANI (@ANI) October 26, 2018
இதேபோல் உ.பி தலைநகர் பாட்னாவிலும் சிபிஐ இயக்குநர் நீக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் போராட்டம் நடைபெற்றது. சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ராகுல்காந்தி உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். மாலைவரை காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ராகுல்காந்தி பின்னர் விடுவிக்கப்பட்டார்.