வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் : சென்னையில் தொடரும் மழை..

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி வருவதால்சென்னையில் நேற்று இரவு முழுவதும் பரசவலாக மழை பெய்தது.

தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவ.3 மற்றும் 4-ம் தேதிகளில் மழைக்கான எச்சரிக்கை இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது. சென்னையில் நேற்று காலையிலும், மாலையிலும் மழை பெய்தது.

இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புதுவையில் குடும்பத்துக்கு ரூ.1000 தீபாவளி பரிசு : முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு..

காய்ச்சல் வந்தால், அலட்சியம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்லுங்கள் : அமைச்சர் விஜயபாஸ்கர்

Recent Posts