இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவன போயிங் 737 ரக விமானம் கடந்த திங்களன்று ஜாவா தீவு கடல் பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 189 பேரும் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
கடலில் மிதந்த சில பயணிகளின் உடலும், உடமையும் மீட்கப்பட்ட நிலையில், கறுப்புப் பெட்டியைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் கடலுக்கு அடியில் இருந்து விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்றை மீட்டுள்ளனர். கருப்பு பெட்டியில் விமானத்தின் வேகம், ஊழியர்களுக்கிடையே கடைசி நிமிடங்களில் நடந்த உரையாடல் உள்ளிட்டவை பதிவாகி இருக்கும். இதனை ஆய்வு செய்து விபத்திற்கான காரணங்களைக் கண்டறிய திட்டமிட்டுள்ளனர்.