இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிவீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்து வரிசையாக விக்கெட்டுகளை பறி கொடுத்தனர்.
அந்த அணி வீரர்களில் அதிகபட்சமாக ஹோல்டர் 25 ரன்களும், எம்.என்.சாமுவேல்ஸ் 24 ரன்களும் எடுத்தனர்.
ஆர் பவல் 16 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கத்தை தொடாமல் பரிதாபமாக பவுலியன் திரும்பினர்.
இந்திய பந்துவீச்சாளர் கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிற பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணி 31.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களுக்கு சுருண்டது.
105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 105 ரன்கள் எடுத்து,
9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி 3-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.கோலி 33 ரன்களும், ரோஹித் ஷர்மா 63 ரன்களும் எடுத்தனர்.