தமிழில் வினாத்தாள் விவகாரம் : கவிஞர் வைரமுத்து கண்டனம்..

“தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் இதே நாளில் தொடங்கவிருக்கும் நிலையில், பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பதிவில்..

அதிகார மையங்களில் நிலவும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும். தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும்.

இந்தக்கருத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நான் வழிமொழிகிறேன். விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்லூதியம் வழங்கி நல்ல மொழிபெயர்ப்பைப் பெறலாம்.
என பதிவிட்டுள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளை வலுவடையும்: வானிலை மையம்

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ். அரிஹாந்த் வெள்ளோட்டம் : பிரதமர் மோடி வாழ்த்து

Recent Posts