மணல்கொள்ளை,தாது மணல் கொள்ளை என தமிழகமெங்கும் இயற்கை வளத்தை அரசு அனுமதியுடன் மணல் கொள்ளையர்கள் சுரண்டி பல கிராமங்களை அழிவின் விளம்பு நிலைக்கே கொண்டு சென்று விட்டனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட வெற்றியூர் கிராமத்தில் அரசின் அனுமதியோடு கிராவல் செம்மண் எடுத்தவர்கள் தற்போது 12 அடி ஆழத்திற்கு செம்மண் எடுத்து கிராமத்தின் முக்கிய கண்மாய்களுக்கு வரவேண்டிய நீராதாரத்தை முற்றிலும் தடுத்து விட்டனர்.
மேலும் பெரிய பள்ளங்களாக தோண்டியிருப்பதால் கிராமமக்கள் அப்பகுதிக்கு செல்ல அச்சபட்டு வருகின்றனர்.
வறட்சி மிகுந்த மாவட்டமான சிவகங்கையில் இப்படிபல கிராமங்களைப் பாலைவனமாக்க துடிக்கின்றனர் செம்மண் கொள்ளையர்கள்..
இந்த செம்மண் சுரண்டலை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆளும் கட்சியின் மாவட்ட முக்கிய நிர்வாகி ஓருவர்தானாம் செம்மண் எடுக்க அனுமதி வாங்கியுள்ளாராம்.
அதனால் அதிகாரிகள் கண்டகொள்வதில்லையாம்,சில இளைஞர்கள் இதை தட்டிக் கேட்டால் ஆளும் கட்சியினரால் மிரட்டப்படுகிறார்களாம்.
பொருள் தேடி வெளியூரிலும்,வெளிநாடுகளிலும் வாழும் இக்கிராம இளைஞர்கள் செம்மண் கொள்ளையைத் தடுக்க பலவேறு வகைகளில் முயற்சி செய்து வருகின்றனர்.
செம்மண் எடுத்த செல்லும் டிப்பர் லாரிகளால் அப்பகுதியில் அதிக விபத்து ஏற்படுகிறது.
இப்பிரச்சனைக்கு தீர்வுகான சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுக கிராம இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அவர்களுடன் சேர்ந்து நாமும் கைகோர்த்து செம்மண் கொள்ளையைத் தடுக்க போராடுவோம்.