விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை அரசு செயல் படுத்து வருகிறது. இந்த பயிர் காப்பீடு பெற கிராம நிர்வாக அதிகாரியால் அடங்கல் சான்றிதழ் வழங்க வேண்டும்.
.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெற்றியூர் கிராமத்தில் பயிர் காப்பீடு சான்றிதழ் பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரியை அணுகியுள்ளனர்.
அதற்கு அவர் சான்றிதழ் அளிக்க லஞ்சம் வேண்டும் என்று நேரடியாகக் கேட்காமல் பல ஆதாரங்களைக் கேட்கிறார். அவை உடனே கொடுக்க இயலாத ஆதாரங்கள்.
ஆனால் கடந்த ஆண்டு அவர் கொடுத்த பயிர் காப்பீடு சான்றிதழ்,இந்தாண்டு அவர் தர மறுக்க காரணம் என்ன?. பயிர் காப்பீடு சான்றிதழுக்கு அவர் புது முறையில் லஞ்சம் கேட்கிறார்.
சிலர் லஞ்சம் கொடுத்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையானப் பயிர் காப்பீட்டுக்கு லஞ்சம் கேட்கும் அதிகாரியால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிறப்பு,இறப்பு சான்றிதழ் உட்பட எல்லா சான்றிதழ்களுக்கும்,பட்டா வழங்களுக்கும் லஞ்சமே பிரதானமாகவுள்ளது.
லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி மீது மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.