‘கஜா’ புயல் 14 கி.மீ., வேகத்தில் நகருகிறது : மாலை அல்லது இரவு கரையை கடக்கும்

வங்க கடலில் உருவான “கஜா“ புயல் கடலுார்-பாம்பன் இடையே நாகை அருகே கரையை கடக்கிறது.

கஜா புயல் வேகம் அதிகரித்து 14 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்க கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் காலை வரை மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்தது.

தற்போது இது 12 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது. சென்னைக்கு 370 கி.மீ., தொலைவிலும், நாகைக்கு 370 கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

அடுத்த 6 மணி நேரத்தில் கஜா புயல் அதி தீவிர புயலாக வலுப்பெறும். இன்று மாலை அல்லது இரவு பாம்பன் – கடலூருக்கு இடையே, நாகை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை கஜா புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

கரையைக் கடக்கும் கஜா: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இரவு 11.30 நாகை அருகே கரை கடக்கும் கஜா: சென்னையில் மிதமான மழை பெய்யும் என தகவல்

Recent Posts