வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, வைகை அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால், வைகை ஆற்றின் இரண்டு கரைகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து யானைக்கல் கல்பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.