திருவண்ணாமலையில் கார்த்திகை விழா : மகாதீபம் ஏற்றப்பட்டது…..

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று(நவ.23) அதிகாலை 03.30 மணி அளவில் சாமி சன்னதி மூல கருவறை முன் “

ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

பின்பு அதிகாலை நான்கு மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதில் மூர்த்தி குருக்கள் கையில் ஏந்தி உள்ள பரணி தீபம் மடக்கில் ஜோதி ரூபமாய் வெளிபிரஹாரம் வலம் வந்த போது ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் தரினசம் செய்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இது போல் திருப்பரங்குன்றம், திருத்தணி, பழநியிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டு மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
பழனி மற்றும் முருகன் கோயில்களிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்று வருகிறது.

உதவிகள் சென்றடையாத குக்கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பிரித்து வழங்கப்படும்: திமுக தலைவர் ஸ்டாலின்

வாக்குறுதிகளை நிறைவேற்ற மோடி தவறிவிட்டார்: ம.பி சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் ராகுல் குற்றச்சாட்டு

Recent Posts