மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில், சட்டப் பேரவைத் தேர்தல், இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.
இதையொட்டி, இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மத்திய பிரதேச மாநிலத்தில் 230 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும்,
ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது.மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில்,
ஆளும், பாஜக., – எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தொடர்ந்து மூன்று முறை ஆட்சியை பிடித்த, பாஜக., இந்த முறையும் ஆட்சியை தக்க வைப்பதில் தீவிரமாக உள்ளது.
மொத்தமுள்ள, 230 தொகுதிகளில், 2,907 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில், 5.04 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மொத்தம், 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வட கிழக்கு மாநிலமான, மிசோரமில், முதல்வர் லால் தன்ஹாவ்லா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தின், 40 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும், இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது
209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில், 7.70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வட கிழக்கு மாநிலங்களிலேயே, மிசோரமில் மட்டுமே ஆட்சியில் உள்ளதால், ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், காங்கிரஸ் களமிறங்கி உள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில், பாஜக., மற்றும் அதன் கூட்டணி ஆட்சி இல்லாத ஒரே மாநிலம், மிசோரம் தான்.எனவே, இந்த மாநிலத்தில் வெற்றி பெற்று,
வட கிழக்கு மாநிலங்கள் முழுவதும், பா.ஜ., ஆட்சியை மலரச் செய்ய, அக்கட்சி மேலிடம் திட்டமிட்டு உள்ளது.இரண்டு மாநிலங்களிலும்,
காலை, 8:00 முதல், மாலை, 5:00 மணி வரை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இரண்டு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள், டிச., 11ல் எண்ணப்படும்.