டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் காந்தி…

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் அமைப்பின் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் பங்கேற்றனர்.

விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் இன்று(நவ.,30) நாடாளுமன்றத்தைநோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர்.

சுமார் 200 அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து நாடாளுமன்றம் அருகே ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தில் காங்., தலைவர் ராகுல், இடதுசாரி தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, தேசியமாநாட்டு கட்சியை சேர்ந்த பரூக்அப்துல்லா, லோக்ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாடி கட்சி சார்பில் முக்கிய நிர்வாகிகள், டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், மற்றும் பலர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் ராகுல் பேசியதாவது: இன்று நடக்கும் போராட்டம் விவசாயிகளின் எதிர்காலத்திற்கான போராட்டம் ஆகும். மோடி அரசு விவசாயிகள் பிரச்சனையை பொருட்டாக மதிக்கவில்லை.

மாறாக அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு உதவி வருகிறது. பணக்காரர்களின் கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகள் தங்களின் உரிமைக்காக போராடுகின்றனர்.

நாட்டில் தற்போது 2 பெரிய பிரச்சனை உள்ளது. ஒன்று விவசாயிகள் பிரச்சனை. மற்றொன்று வேலை வாய்ப்பு.

ஆனால் விவசாயிகளும், இளைஞர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு துணை நிற்கும். அவர்களின் பிரச்சனையை தீர்ப்போம் இவ்வாறு ராகுல் பேசினார்.

பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் ஓராண்டிற்கு நீட்டிப்பு : சென்னை உயர்நீதிமன்றம்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு : நள்ளிரவு முதல் அமல் ..

Recent Posts