தமிழக அரசு விரைவு ஏசி பேருந்துகளில் திங்கள் — வியாழன் கட்டணம் குறைப்பு

தமிழக அரசு ஏசி விரைவுப் பேருந்துகளில் திங்கள் முதல் வியாழன் வரையிலான நாட்களுக்கு மட்டும் 10 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் கடந்த ஜூலை மாதம் படுக்கை வசதி கொண்ட புதிய ஏ.சி. பேருந்து சேவைகளை தொடங்கியது.

34 ஏ.சி. படுக்கை வசதி கள், ஏ.சி. இல்லாத 2 படுக்கை வசதி பேருந்துகள், 10 அல்ட்ரா கிளாசிக் பேருந்தகள் (கழிவறை வசதி கொண்டது), 6 ஏ.சி. படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்துகள் என 52 சொகுசு பேருந்துகளை தற்போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.

நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, திருச்சி, போடி, கீழக்கரை, கோவை, பெங்களூர், எர்ணாக்குளம், தஞ்சை, சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு நகரங்களுக்கு இந்த ஏ.சி. படுக்கை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடம் அதிருப்தி எழுந்தது.

தனியார் ஆம்னி பஸ்களின் போட்டியை சமாளிக்க கொண்டு வரப்பட்ட அந்த அரசு விரைவு பேருந்துகளில், ஆம்னி பேருந்து கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சில வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகளை விட அரசு ஏ.சி. பேருந்துகளில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை கட்டணம் அதிகமாக இருந்தது.

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஏ.சி. பேருந்துகள் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்த நடுத்தர மக்கள், நாளடைவில் அதிக கட்டணம் காரணமாக மனமாற்றம் அடைந்தனர். இதன் காரணமாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் அரசு ஏ.சி. பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது. குறிப்பாக திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பயணிகள் வருகை மிக, மிக குறைந்து போனது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டுமே ஓரளவு பயணிகள் பயணம் செய்தனர்.

வார நாட்களில் பயணிகள் வருகை நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்ததால் தொலைத்தூர ஏ.சி. பஸ்களின் நிகர வருவாயிலும் இழப்பு ஏற்பட்டது. இதுபற்றி ஆய்வு செய்தபோது அதிக கட்டணம்தான் முக்கிய காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து ஏ.சி. படுக்கை வசதி பஸ்களின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அரசு ஏ.சி. பேருந்துகளில் 10 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஏ.சி. படுக்கை வசதி பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு சராசரியாக 20 பைசா குறைக்கப்பட்டுள்ளது. அல்ட்ரா கிளாசிக் பேருந்துகள், ஏ.சி. இல்லாத படுக்கை வசதி இல்லாத பஸ்களில் கிலோ மீட்டருக்கு 10 பைசா குறைக்கப்பட்டுள்ளது.

10 சதவீதம் கட்டணம் குறைப்பு காரணமாக அரசு ஏ.சி. பேருந்துகளில் சராசரியாக ரூ.40 முதல் ரூ.150 வரை குறைந்துள்ளது. இந்த கட்டண குறைப்பு நேற்று (6-ந்தேதி) முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த கட்டண குறைப்பு திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அமலில் இருக்கும்.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழையக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல திருவிழா மற்றும் பண்டிகை நாட்களிலும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் விபரம்

ஏசி படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து

வழித்தடம்                    பழைய கட்டணம்            புதிய கட்டணம்

சென்னை-திருச்சி                             705                              635

சென்னை-பெங்களூர்                     775                              700

சென்னை-மதுரை                               975                           880

சென்னை-போடிநாயக்கனூர்        1110                            1000

சென்னை-கீழக்கரை                         1145                             1035

சென்னை-தூத்துக்குடி                       1275                            1145   

சென்னை-திருநெல்வேலி                1315                            1185

சென்னை-எர்ணாகுளம்                     1505                            1355

சென்னை-கோயம்புத்தூர்                1080                            975     

சென்னை-நாகர்கோவில்                 1475                            1330

சென்னை-மைசூர்                                   1065                            965     

வேளாங்கன்னி-பெங்களூர்               1085                            990

நாகர்கோவில்-பெங்களூர்                  1480                            1385

 

ஏசி இல்லா படுக்கை வசதியுடன் கூடிய பேருந்து

 

                                                                பழைய கட்டணம்       புதிய கட்டணம்

சென்னை-மதுரை                            725                              630

அல்ட்ரா கிளாசிக் (கழிப்பறை)

சென்னை-தஞ்சாவூர்                        410                              375

சென்னை-சேலம்                                 400                              365

சென்னை- திண்டுக்கல்                   500                              460     

 

விடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு

சசிகலாவிடம் சிறைக்கு நேரில் சென்று விசாரணை: ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

Recent Posts