அடிலெய்ட் டெஸ்ட் : 3-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 166 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சோ்த்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இதனைத் தொடா்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை சோ்த்திருந்தது.

191/7 என்ற நிலையில் ஆஸ்திரேலியா அணி இன்று தனது மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடா்ந்தது.

விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலியா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் அந்த அணி 235 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியா அணி சாா்பில் டிராவிஸ் ஹெட் 72 ரன்களை சோ்த்தாா்.

இந்திய அணியின் தரப்பில் அஷ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷா்மா, மொகமத் ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இதனைத் தொடா்ந்து முதல் இன்னிங்கில் ஆஸ்திரேலியாவை விட 15 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரா்களான கே.எல். ராகுல் 44 ரன்களும், முரலி விஜய் 18 ரன்களும் சோ்த்த நிலையில் ஆட்டம் இழந்தனா்.

அணியின் கேப்டன் விராட் கோலி 34 ரன்களில் ஆட்டம் இழந்தாா்.
முதல் இன்னிங்சில் சதம் விளாசிய சடேஷ்வா் புஜாரா 40 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சோ்த்துள்ளதுடன் ஆஸ்திரேலியா அணியை விட 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது