திருவண்ணாமலையைச் சேர்ந்த சிறுமி மிஷ்தி(10). இவர் தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறாள்.
சிறுவயது முதலே யோகாசனத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டவர்.
பல்வேறு வகையான யோகாசனங்களையும் கற்று தேர்ச்சி பெற்று திகழ்கிறார். இந்நிலையில் யோகாசனத்தில் உலக சாதனை படைக்க திட்டமிட்டார்.
இதற்காக தனியார் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து யோகாசனத்தை தொடங்கிய சிறுமி, 3 நிமிடங்களில் 103 விதமான ஆசனங்களை செய்து அசத்தினார்.
இது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிறுமி மிஷ்தியை பாராட்டி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சான்றிதழ் வழங்கினார்.
இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..