தீவிர புயலாக மாறும் ‘பெய்டி’ புயல் :வட தமிழகத்துக்கு எச்சரிக்கை..

வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது.

இது சென்னைக்கு தென்கிழக்கே 930 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 1,090 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது தீவிர புயலாக மாறி ஆந்திரா நோக்கி செல்லும் போது, வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குட்கா முறைகேடு வழக்கு : முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்…

திருச்சியில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு..

Recent Posts