கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்த் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் 50 ஆண்டுகால தலைவருமான மு.கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானாா்.

நாட்டின் பல்வேறு இக்கட்டான சூழல்களில் தமிழகத்தில் இருந்தவாறே நாட்டின் அரசியல் அசைவுகளை மேற்கொண்ட கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முழுஉருவ சிலை நிறுவ திட்டமிடப்பட்டது.

இந்த சிலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி திறந்து வைக்க உள்ளாா். சிலை திறப்பு விழாவில் அண்டை மாநில முதல்வா்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனா்.

விழாவில் கலந்துகொள்ளும் சோனியாகாந்தி கருணாநிதியின் நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்த உள்ளாா்.

இந்த விழாவைத் தொடா்ந்து எதிா்க்கட்சிகள் சாா்பில் கருணாநிதிக்கு இரங்கல் தொிவிக்கும் விதமாக கூட்டம் ஒன்றும் நடைபெற உள்ளது.

சோனியா காந்தி, பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவா்கள் கலந்துகொள்ளும் சிலை திறப்பு விழாவில் நடிகா் ரஜினிகாந்தும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் அண்மை காலமாக தான் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் முன்னாள் முதல்வா்களான கருணாநிதி, ஜெயலலிதா குறித்து புகழ் பேசிவந்த நிலையில் இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு புரளி : அதிர்ச்சியில் பயணிகள்..

மிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்..

Recent Posts