மத்தியப்பிரதேசத்தில் 48 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்..

மத்தியப்பிரதேசத்தில் 48 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து முதலமைச்சர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

அம்மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.

புதிய முதலமைச்சராக கடந்த திங்களன்று கமல்நாத் பதவியேற்றார். பதவிக்கு வந்த பிறகு முதல் நடவடிக்கையாக 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் ஆணையில் கையெழுத்திட்டார் கமல்நாத்.

இதன் தொடர்ச்சியாக, 24 மாவட்ட ஆட்சியர்கள், பல்வேறு துறைகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் என மொத்தம் 48 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்து கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்தூர், தார், உஜ்ஜயினி, ராட்லம் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் இந்த நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : விஷால்..

ரஜினிகாந்த் தொடங்கும் டிவி சேனல்…

Recent Posts