5 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா : தமிழக அரசு.

அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அனைத்து விதமான நீர்நிலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகள், மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களை தவிர்த்து,

பிற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள தகுதியுள்ள நபர்களுக்கு வரன்முறை செய்து வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளின் ஆண்டு வருமான வரம்பாக நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஊரகப் பகுதிகளில் 4 சென்டுக்கும்,

நகரப் பகுதிகளில் இரண்டரை சென்டுக்கும், மாநகராட்சி பகுதிகளில் 2 சென்டுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும்.

இச்சிறப்பு வரன்முறை திட்டம் 6 மாத காலத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. தேர்வு தேதி அறிவிப்பு..

16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் : தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..

Recent Posts