சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம், 16 தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு ஒப்புதல்..
16 தனியார் தொழில் நிறுவனங்களை 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிற்பகல் 12.30 மணி முதல் 1.45 மணிவரை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் செயல்பாட்டில் உள்ள 16 தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்த நிறுவனங்கள் 14 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ள நிலையில், சுமார் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ளவுள்ளவர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பது,
அவர்கள் முதலீடு செய்ய வாய்ப்புள்ள துறைகள், அவற்றுக்கான ஒப்புதல் பணிகள், நிலம் ஒதுக்குதல் உள்ளிட்டவை குறித்தும்,
மேகதாது மற்றும் ஸ்டெர்லைட் விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.