இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..
1997ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறாா்.
கடந்த 1997ம் ஆண்டு அப்போதைய பிரதமா் ஹெச்.டி.தேவகவுடா இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலமான போகிபீல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினாா்.
21 ஆண்டுகால கட்டுமானப்பணிக்குப் பின்னா் இந்த பாலத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்த வைக்க உள்ளாா்.
இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமாா் 4.98 கி.மீ. தூரத்திற்கு செல்கிறது. இந்த பாலம் நாட்டின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
5 ஆயிரத்து 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக கருப்படுகிறது.