டிச., 31-ம் தேதி மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி…

2019 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புத்தாண்டு பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டப்படும் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 1 மணியுடன் கேளிக்கை நிகழ்ச்சிகளை நிறுத்துவதுடன், மதுபானங்களையும் விற்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் மதுபானம் பரிமாறக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள காவல்துறை,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் தண்டனை வழங்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.

பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை..

கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்: இரத்தம் கொதிக்கிறது…: ஸ்டாலின் டிவிட்

Recent Posts