கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் ஏற்றியது குறித்து தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்துள்ளது.
எச்.ஐ.வி. ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய நிலையில், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து
ஜனவரி 3ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அமர்வு உத்தரவிட்டுள்ளது.