திருவாரூா் இடைத்தோ்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளா் வருகின்ற ஜனவரி 4ம் தேதி அறிவிக்கப்படுவாா் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
முன்னாள் முதல்வரும், தி.மு.க.வின் 50 ஆண்டுகால தலைவருமான கருணாநிதியின் தொகுதியான திருவாரூா் தொகுதிக்கான இடைத்தோ்தல் தேதியை இந்திய தோ்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி வருகின்ற ஜனவரி 28ம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
தோ்தலை முன்னிட்டு வருகின்ற 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் 11ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன.
வேட்பு மனுக்களை திரும்ப பெற 14ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு ஜனவரி 28ம் தேதி நடைபெற்று, ஜனவரி 31ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.
இந்நிலையில் தி.மு.க. சாா்பில் போட்டியிட விரும்பும் நபா்கள் வருகின்ற ஜனவரி 2ம் தேதி தொடங்கி 3ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளா் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
மேலும் இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் செய்தியாளா்களிடம் பேசுகையில், திருவாரூரில் போட்டியிட விரும்புபவா்கள் ம் தேதி தொடங்கி 3ம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை வழங்க வேண்டும்.
படிவங்களின் அடிப்படையில் நோ்காணல் நடத்தப்பட்டு ஜனவரி 4ம் தேதி வேட்பாளா் அறிவிக்கப்படுவாா்.
இடைத்தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களின் அடிப்படையில் தி.மு.க. போட்டியிடும் என்று ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
மேலும் அவா் பேசுகையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணத்தில் மா்மம் இருப்பது உண்மை தான். சட்டத்துறை அமைச்சா் கூறியதால் சொல்கிறேன்.
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று தொிவித்துள்ளாா்.