தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளின் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..
பொதுத்துறையை சேர்ந்த தேனா வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளின் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், விஜயா வங்கி, தேனா வங்கியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பேங்க் ஆப் பரோடாவிற்கு மாற்றப்படுவார்கள் என்றார்.
இந்த இணைப்பு நடவடிக்கையில் ஆட்குறைப்பு செய்யப்படாது என்று அவர் உறுதி அளித்தார். இதன் மூலம் எஸ்பிஐக்குப் பிறகு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நாட்டின் 2வது பெரிய பொதுத்துறை வங்கியாக பேங்க் ஆப் பரோடா இருக்கும்.
தேனா வங்கியின் ஆயிரம் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு 110 பேங்க் ஆப் பரோடா பங்குகளும், விஜயாவங்கியின் ஆயிரம் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு 402 பங்குகளும் வழங்கப்படும்.