சீனா வியக்கத்தக்க அளவு வளர்ந்து வருகிறது. தொழிலிலும்,விவசாயத்திலும் கொடிகட்டி பறக்கிறது. இதற்கு உதாரணமாக
40 ஆண்டுகளுக்கு முன்னால் வறண்ட பாலை நிலத்தை ஒட்டிய இருந்த கிராமத்தை, இப்போது பெரு நகரமாக மாற்றி உள்ளது சீனா.
அந்நாட்டின் கோபி பாலைவனத்தை ஒட்டி உள்ள கோர்லா என்ற கிராமமே இப்போது தன் உருவை மாற்றி பெரு நகராக காட்சி தருகிறது.
வறண்டு, மரங்களை இழந்து மணல் நிறைந்து கிடந்த கோர்லாவில் இப்போது மூன்று ஆறுகள் பாய்கின்றன.
சோலைகள் சிரிக்கின்றன. ஆறுகளின் அன்னங்கள் நீந்தி மகிழ்கின்றன. வானுயர்ந்த கட்டிடங்கள், வளமான வாழ்க்கை என கோர்லாவின் தோற்றமே மாறி உள்ளது.
கடும் உழைப்பும், தீர்க்கமான நடவடிக்கையும் இருந்தாலும் பாலையும் சோலையாகும் என்பதை உலகிற்கு சொல்கிறது கோர்லா.