தமிழக அரசு வரும் ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. அதிமுகவும், பாஜகவும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாக மற்ற கட்சிகள் விமர்சித்து வந்தன.
இந்நிலையில், கஜாபுயல் பாதிப்பு இடர் நீக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், இடைத்தேர்தலை ஏப்ரல் வரை நடத்த வேண்டாம் என தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், இதன் அடிப்படையில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.