பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சிலை கடத்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில்,

இது தொடர்பான வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், ‘கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் பூட்டு போடப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வழக்கை விசாரணை அதிகாரி குமார் விசாரித்து வருகிறார்.

ஆனால், அவர் தன்னுடைய பணியை கவனிக்காமல், டிஜிபி அலுவலகத்தில் பேட்டியளித்துக்கு கொண்டிருக்கிறார்.’ என்று குற்றம் சாட்டினார்.

இதே போல் நீதிமன்றம் உத்தரவிட்டும் கிண்டியில் தன்னுடைய அலுவலகத்தைப் பயன்படுத்த முடியாமல் தெருவில் நிற்பதாக சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.

பொன். மாணிக்கவேலின் குற்றச்சாட்டுக்களை அடுத்து, தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மீறுவதாக கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலை தொடர்ந்தால், தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும்என்றும் எச்சரித்தனர்.

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்ததாக தகவல் ..

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா ஏற்பு; செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கீடு

Recent Posts