சிரியாவிலுள்ள குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் என்று துருக்கி அரசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழித்து கட்டும் பணியில் அமெரிக்க படைகளுடன் இணைந்து குர்திஷ் படைகளும் போரிட்டன. ஐஎஸ் தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதால்,
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் திருப்பப் பெறப்படுவதாக டிரம்ப் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, தீவிரவாதிகளான குர்திஷ் போராளிகள் மீது ராணுவ தாக்குதல் தொடங்க இருப்பதாக அண்டை நாடான துருக்கி அறிவித்தது.
இந்த நிலையில் குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தினால், பொருளாதார பேரழிவு ஏற்படும் என்று டுவிட்டரில் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.