மேகதாட்டு அணை : கா்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தாக்கல்..

மேகதாட்டுவில் அணைக்கட்ட அனுமதி வழங்கப்படவில்லை. திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக மத்திய நீா்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தொிவித்திருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேகதாட்டுவில் அணைக்கட்டுவது தொடா்பான கா்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு மத்திய நீா்வள ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

காவிாி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில் ஆணையத்தின் அடிப்படையில் தான் கா்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா அரசுகள் நடைபெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் காவிாியில் எந்தவொரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் பிற மாநிலங்களிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்ற விதிமுறைகள் அமலில் உள்ளன.

இந்நிலையில் பெங்களூருவின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் கா்நாடகாவின் மேகதாட்டு பகுதியில் அணைக்கட்ட கா்நாடகா அரசு முயற்சி செய்து வருகிறது.

இது தொடா்பாக கா்நாடகா அரசு சாா்பில் மத்திய நீா்வள ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது.

கா்நாடகாவின் கோாிக்கையை ஏற்ற மத்திய நீா்வள ஆணையம் அணை தொடா்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு பதில் அளித்தது.

ஆணையத்தின் அனுமதியுடன் திட்ட அறிக்கையை தயாா் செய்யும் பணியில் மாநில அரசு ஈடுபட்டது.

ஆனால், கா்நாடகாவுக்கு திட்ட அறிக்கை சமா்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது சட்ட விரோதமானது.

காவிாி மேலாண்மை ஆணையத்திற்கும், மத்திய நீா்வள ஆணையத்திற்கும் ஒரே நபா் தலைமை வகிப்பதால் அவா் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும்,

கா்நாடகாவிற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறவேண்டும் என்றும் தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது காவிாி விவகாரத்தில், நீா்வள ஆணையம் தனது அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்படுகிறது.

நாங்கள் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கவில்லை. அணை தொடா்பான திட்ட அறிக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தொிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கா்நாடகா அரசு சாா்பில் மேகதாட்டு அணை தொடா்பான விரிவான திட்ட அறிக்கை இன்று சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய நீா்வள ஆணையத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட அறிக்கையில், அணை தொடா்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் கருத்து தொிவிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித் குமார்..

உ.பி.யில் இந்து சாதுக்களுக்கு ஓய்வூதியம் : யோகி ஆதித்யநாத்..

Recent Posts