தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாநிலம் முழுவதும் தற்காலிக பணிக்காக விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிாியா்களுக்கு மத்திய அரசு பணியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோாிக்கையை முன்னிருத்தி தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி ஆசிாியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மாா்ச் 1ம் தேதி பன்னிரெண்டாம் பகுப்பு பொதுத் தோ்வுகள் தொடங்கவுள்ள நிலையில் ஆசிாியா்கள் போராட்டத்தில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று பலரும் கருத்து தொிவித்து வருகின்றனா்.
இருப்பினும் நாங்கள் பணிக்கு திரும்ப மாட்டோம் என்று ஆசிாியா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பள்ளிக்கு வராத ஆசிாியா்களின் அலட்சியப் போக்கை கண்டித்து மாணவா்கள், மாணவா்களின் பெற்றோா் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும் தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிாியா்களை நியமிக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் தற்காலிக பணிக்காக பட்டதாாிகள் பலரும் தங்கள் விண்ணப்பங்களை வழங்குவதற்காக மாவட்ட கல்வி அலுவலகங்களில் குவிந்து வருகின்றனா்.