பொறியியல் கல்லூரி பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற அண்ணா பல்கலை.,யின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, நகல்களை மட்டும் வைத்திருக்க அறிவுறுத்தி அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை., சுற்றறிக்கை விடுத்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் சான்றிதழ்களை திரும்ப கொடுத்துவிட்டால் பாதியிலேயே வேறு பணியிடத்துக்கு ஆசிரியர்கள் சென்று விடுவர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிப்படையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், பல்கலை.,யின் உத்தரவுக்கு தடை விதித்து 2 வாரத்தில் பதிலளிக்கவும் ஆணையிட்டது.